எல்லாருக்கும் வணக்கம், எதிர்முனைல
ஆளே இல்லைன்னாலும் வணக்கம் சொல்றதுதான தமிழர் பண்பாடு. ரெண்டு வருசத்துக்கு முன்னால ஆரம்பிச்ச காலத்துல இருந்தே இந்த
வலைப்பூவுக்கு வாசகர்ன்னு ஒருத்தருமே இல்லன்னு எனக்கே தெரியும். இங்க வந்து படிச்ச, படிக்கிற கொஞ்ச(2 அல்லது 3) பேரும்கூட என் தொல்ல தாங்க முடியாம படிக்க
வந்தவங்களா தான் இருப்பாங்க.. எனி
வே… இந்த கட்டுரை 2 பேருக்காவது போய் சேந்தாகூட எனக்கு வெற்றியே…!
ஜெர்சி..
அப்புடின்னா என்னன்னு ஒவ்வொரு பையனுக்கும் தெரியும். அது என்ன பக்கத்து தெரு ஃபிகரா அப்புடின்னுலா
கேக்கக்கூடாது. (அது ஜெஸ்ஸி.. இது ஜெர்சீ….!) ஜெர்சின்னா ஒரு துணிவகைன்னு சொல்லலாம். ரொம்ப மெலீசா போட்ருக்கறதே தெரியாம இருக்கும். விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் எல்லாரும் இதுல செஞ்ச துணிய தான்
போட்டுட்டு ஹாயா விளையாடுவாங்க. இதுல
சொல்றதுக்கு என்னடா இருக்குன்னு நீங்க கேக்குறீங்க..
சொல்றேன்..
நம்ம ஊருல திருவிழா, கல்யாணம், காதுகுத்து, பொங்கல் போட்டி, கபடி, கிரிக்கெட் போட்டி எல்லாத்துக்கும் நம்ம பசங்க, அவங்க க்ரூப்புக்காகவே செலக்ட் பண்ணி அடிச்சு
போடுர சட்டைதான் ஜெர்சி. இதுக்கு
ஒரிஜினல் பேர் இதானான்னு கூட தெரியாது. ஆனா திருவிழான்னு வந்துட்டா ஒவ்வொரு க்ரூப்பும் தண்ணீர் பந்தலுக்கும்
அன்னதான பறிமாறலுக்கும் ஒரு பாலமா இருந்து செயல் படுறதுக்குன்னு இருக்கும், அவங்க ஜெர்சி கலர் ஒன்னா தான் இருக்கும்.
இத ஆர்டர் பண்றதுக்கும் சைஸ் வாரியா டிஸ்ட்ரிபியூட் பண்றதுக்குமே க்ரூப்ல
ஒரு ஆள் தனியா இருப்பான். இவனுக்காகவே
திருப்பூர்ல வேல பாக்குற ஒரு மாமாவோ அல்லது ஊர்லயே பெரிய ஜெர்சி அடிக்குற கடைல
இருக்குற சித்தப்பாவோ கண்டிப்பா பொறந்துருப்பாங்க. அவனே அந்த முழுப்பொறுப்பையும் ஏத்துக்குவான். க்ரூப்ல இருக்குற எல்லாருமே ஜெர்சிக்கு காசு குடுக்கணும்னாலும் முடியாத
நண்பன்கிட்ட எவனும் கை நீட்டி காசு வாங்க மாட்டான். அவனுக்கும் சேத்து மத்த எல்லாரும்தான் போட்டுக்குவாங்க.
ஒவ்வொரு ஜெர்சிக்கும் நம்பர் போடுறதுலதான் சண்டையே வரும். ஒவ்வொருத்தனுக்கும் 10
இல்லாட்டி 7 தான்
கேப்பானுக. எல்லாருமே சச்சின், தோனி ஆகணும்னா என்ன செய்யறது? புதுசா 18-க்கு சண்ட போட ஆர்ம்பிச்சுருக்காய்ங்க..!
இதுல சில காமெடிகளும் நடக்கும். எங்க ஊருல ஒரு க்ரூப் இருக்கு 'ஸ்பீடு க்ரூப்ஸ்'ன்னு. ஒரே ஒரு க்ரூப்புக்கு எதுக்குடா ஸ்பீடு க்ரூப்'ஸ்'னு பேரு வைக்குறீங்கன்னு கலாய்ச்சு விட்ருக்கோம்.
ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்குற் கிரிக்கெட்
டோர்னமென்ட்டுக்கும் பேரும் ஜெர்சியும் வந்து குவியும் பாருங்க… அதுல சில சுவாரசியமானவை.
- இளந்தென்றல் (கிரிக்கெட்டுக்கும் தென்றலுக்கும் என்னடா சம்பந்தம்..?),
- சூறாவளி சூப் பாய்ஸ் (கொலவெறி வந்த புதுசுல),
- ஃபைவ் ஸ்டார் பாய்ஸ் (இது பாக்ஸ் கேம் டோர்னமென்ட்க்காக, ஒரு டீமுக்கு அஞ்சு பேருதான்.. டென்னிஸ் பால் வெச்சு விலையாடனும்.. சிக்ஸ் அடிச்சா அவுட்டு, கடைசி ஓவர் என்ன அடிச்சாலும் டபுள்),
- அடேங்கப்பா 11-பேர் (அந்த 11-ங்குற நம்பர்ல தீ எறியனும்ன்னு ஜெர்சி கடக்காரன கொலையா கொண்டவன்லா இருக்கான்),
- கப் எங்களுக்குத்தான் ('கப்' ங்குற வார்த்தையவே கப்பா டிசைன் பண்ணீருப்பாய்ங்க, ஆனா இது வரைக்கும் கப் அடிச்சாய்ங்களான்னு தெரியல),
- ராக்கிங் கய்ஸ் (இது கொஞ்சம் படிச்சுட்டு வேலையில்லாம சுத்துற க்ரூப்னு பேர்லே தெரியும்)
இப்புடி நெறைய இருக்கு, கபடி
ஆடிட்டு நம்ம பசங்க பனியனோட ஜெர்சிய புழிஞ்சு தோள்ல போட்டுட்டு வர்ற ஸ்டைல
பாக்குறதுக்குன்னே பொண்ணுக கூட்டம் நிக்கும். கிரிக்கெட் விளையாடி கப் ஜெயிச்சு க்ரூப் பேர சொல்லும்போது கத்திக்கிட்டே
அந்த ஜெர்சிய கழட்டி கங்குலி மாரி சுத்தாம இருந்தவன் எவனும் இல்ல. அன்னதானத்துல ஆயிரம் பேருக்கு சோறு போட்டாலும் "மாப்ள.. ஜெர்சில பொங்கல் ஒட்டீருக்கா பாரு..!"ன்னு கேப்பான். இது எல்லாமே நட்புன்ற ஒரு விஷயத்தோட வெளிப்பாடுதான?, நண்பர்களோட சேந்து ஒரு விஷயத்துல
பங்கேத்துக்கும்போது உங்களுக்குன்னு ஒரு தனித்துவத்த உருவாக்குற விஷயம் தான் இந்த
ஜெர்சி.
எனக்கும் ஒரு ஜெர்சி கதை இருக்கு, ஆனா அது ஊர்ல அடிச்சது இல்ல, காலேஜ்ல அடிச்சது.. ரோபோ
ராக்கர்ஸ்ன்னு அடிச்சு பின்னாடி 15 நம்பர்
போட்டது என்னுடையது. மெக்கட்ரானிக்ஸ்
படிச்சனால எங்களுக்கு ரோபாட்ஸ்தான் கோர் ஃபீல்ட். அத சட்டையில அடிச்சு போடுறதுதான் கெத்துன்னு நாங்க பண்ணோம். நாங்க அப்புடி போட்டப்போகூட மத்த சில
டிப்பார்ட்மன்ட் பசங்க கிண்டல் பண்ணிருக்காங்க. எதோ அவங்கள்லா வானத்துல இருந்து குதிச்சமாரி…!
நம்ம கிராமங்களுக்குன்னு எப்புடி
ஒவ்வொரு விஷயத்துலயும் ஒரு தனித்தன்மை இருக்கோ அது மாதிரிதான் இந்த ஜெர்சி
விஷயமும். விழா கமிட்டிக்காரங்க
முந்தியெல்லாம் ஒரு பேட்ச் குத்தி வெள்ள வேட்டி வெள்ள சட்ட போட்ருப்பாங்க. இப்போ அதுக்கு பதிலா ஜெர்சி மேல பேட்ச். கால மாற்றத்துக்கு ஏத்த மாறி தன்ன பரிணமித்து
கொள்ற சக்தி கிராமங்களுக்கு இருக்கு, ஆனா எதையும் வழக்கொழிஞ்சு போற அளவுக்கு அவை விடுறதில்ல
அப்புடிங்குறதுதான் ஒரு சந்தோசமான விஷயம். அதுக்கு சாட்சிதான் இந்த ஜெர்சி. ரொம்ப பேசுறேனோ..!?
ஒவ்வொரு கிராம கல்யாண வீடுகள்ளையும் பரிமாற வர்ற 18,19
வயதுல இருக்க பசங்க எல்லாரும் கிழிஞ்ச, அழுக்கான பேன்ட்டும் ஜீன்ஸும் தான் போடுறாங்க. அவங்க உடம்புல ஒழுங்கா போட்டுருக்கறது அந்த
ஜெர்சி மட்டும்தான். யார் சொன்னது
கிராமங்கள்ல பார்ட் டைம் ஜாப் இல்லன்னு? ஃபங்ஷன்னு வந்தா சேர், வாழமரம்
இறக்குறதுல இருந்து, சடங்குக்கு
பந்தல் போடுறதுல இருந்து, தேர்
போகும்போது விலக்கி விடுறதுல இருந்து, மைக்செட் போட்டு கெழவிகள அனுப்பி வைக்குற வரைக்கும் இங்க நெறைய வேல
இருக்கு இந்த ஜெர்சிக்கு. கூலி
பத்தாம ஆத்தாவும் அப்பனும் கைய பிசையும்போது மூட்டை தூக்கி வந்த காச ஜெர்சிக்குள்ள
இருந்து எடுத்து குடுக்கும்போது 12-ஆவது
படிக்குற அந்த பையனுக்கு காலம் பூரா சல்யூட் அடிக்கலாம்னு தோணும்.
போன வாரம்கூட, நான்
தங்கியிருக்க இடத்துக்கு பக்கத்துல இருக்க ஒரு மெஸ்ல வேல பாக்குற பையன், அவன் ஜெர்சி பாக்கெட்ல இருக்க செல்போன் ரிங்
அடிச்சுது. வந்த பாட்டை வெச்சே "பங்காளிதான் பண்றான்.."னு என்னைப்பாத்து சிரிச்சுட்டே அந்த போன
அட்டெண்ட் பண்ணி "சூப்பர்
வணக்கம்.. !" மறுமுனைக்கு
காத்திருந்து,
"சொல்லு பங்காளி.."
என்று பேச ஆரம்பித்தான். எனக்கு வர வேண்டிய தோசை அவன் கையிலதான் இன்னும் இருந்துச்சு. எனக்கு அவன்மேல கோவமே வரல.. மாறா அவன் எத்தனை நண்பர்கள, சொந்தத்த விட்டுட்டு இங்க வந்து வேல
பாத்துக்கிட்டுருக்கான்னு தோனுச்சு. அதுமாரிதான நாமலும் அப்புடின்னு ஒரு சுய இரக்கமும் ஏற்பட்டுச்சு. அவன் ஜெர்சில எழுதிருந்த பேர் "சூப்பர் பாய்ஸ்.."
நிஜத்திலும் தான்.
நம்ம எல்லார் வாழ்க்கையிலையும் நெனச்சுப்பாக்குறதுக்கு நெறைய விஷயங்கள்
இருக்கும், அதுல முக்கால்வாசி
நண்பர்கள் தான் நெறஞ்சுருப்பாங்க. நம்மள்ல
எத்தன பேர் இந்த மாரி ஜெர்சி போட்டு சுத்திருப்போம். ஒரு வேலைய சேந்து செய்ய எத்தனை முறை முனைந்திருப்போம்? ஜெர்சி போட்டவங்க அந்த ஜெர்சிய பத்தி நினைவு
கூர்ந்திருப்பீங்க.. போடாதவங்க
முதல்ல உங்க நண்பர்களோட சேந்து ஒரு ஜெர்சி அடிங்க ப்ளீஸ்..!
ரெஸ்ட் எடுங்க..!!!


very nice!!!!!!!!!!! Tamizhla mistake illama post pannathu innum happya iruku!!!!!! konjam city pasangala pathiym eluthunga....logu....!!!
ReplyDeletewaiting for another good topic.....!!!!!!!!!!
thanks hari.. you are the first to encourage my effort..! thanks a lot first.. kandippa city pasanga pathiyum eluthuren..! !!!!!!!!
ReplyDelete