Saturday, 4 August 2012

முதல் பதிவு

அனைவருக்கும் வணக்கம்,
               இந்த ப்ளாகை ஏதோ விளையாட்டாகத் தான் ஆரம்பித்தேன். என் நண்பன் நிவாஸ் ஆரம்பித்த வலைப்பக்கத்தை பார்த்துத் தொடங்கப்பட்ட ஒரு amateur effort தான் இது. எனக்கும் அவனுக்கும் எப்போதுமே ஆரோக்கியமான போட்டி உண்டு(?) . எனக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும் ஆனால் அதனை வெளிப்படுத்தியது அவனுடன் போட்டி போட்டுக்கொண்டு இஸ்க்கூல் இஸ்க்கூலாக ஓவியப் போட்டியில் கலந்து கொண்டதனால் தான். இது போன்ற பல உதாரணங்கள் உண்டு. நான் என் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கையைப் பிசைந்து கொண்டிருந்தபோது "இஞ்ஜினியரிங்க் படிப்பில் சேர்ந்தால் நல்ல காசு பாக்கலாம் மாப்ள...!" என்று என் வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கியதும் அந்த படுபாவிதான். "ஏரோநாட்டிக்கல் இல்லாட்டி மெக்கட்ரானிக்ஸ் மாரி கோர்ஸ் எடுத்துப் புதுசா படிக்கப் போறேண்டா...!" என்று என் நெஞ்சில் அமிலத்தை விதைத்தான். சரி அம்ம பய சொல்றானேன்னு ஒரு சூப்பர் காலேஜ்(?)ல மெக்கட்ரானிக்ஸ் கோர்ஸ் எடுத்துட்டு வெற்றிகரமா கவுன்சிலிங் போயிட்டு வந்தா "மச்சி நான் "ஈ.சி.ஈ" எடுத்துட்டேண்டா" என்று குண்டைத் தூக்கிப் போட்டவன்.(என்ன சொல்ல வர்ற... அவன் உனக்கு ஃப்ரெண்டா எதிரியா?னு நீங்க கேக்குறது புரியுது). அதற்காக சொல்ல வரவில்லை என் வாழ்க்கையையே மாற்றிவிட்ட நிமிடங்களுக்கு சொந்தக்காரன் தான் இந்த துஷ்ட வேலையில் நான் இறங்கக் காரணமானவன் என்று கூறிக்கொண்டு, இனி நான் எவ்வளவு கேவலமாக பதிவிட்டாலும் அதற்கு முழுமுதற் காரணமும் அந்த மனிதருள் மாணிக்கத்தையே சாரும் எனவும் பதிவு நன்றாக இருந்தால் அது முழுக்க முழுக்க லோகுவையே சாரும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் (ஹீ... ஹீ... ஹீ...) இன்று தொடங்கும் இந்த பதிவுச்சரங்கள் எதைப் பற்றி இருக்கும் என்றால்...
எதைப் பற்றி இருக்கும் என்றால்...
எதைப் பற்றி இருக்கும் என்றால்...
அது அடுத்த பதிவுல தான் எனக்கே தெரியும்...!
(அப்பாடி முதல் பதிவு முடிஞ்சுடுச்சு...!!)


ரெஸ்ட் எடுங்க....!

2 comments: