நான் முந்தைய பதிவில் கூறியதைப் போல
அடுத்த பதிவு எதனைப் பற்றி எழுதவேண்டும் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் வீட்டில் சும்மா அமர்ந்திருந்தபோது என்றோ வாங்கி வைத்த 'ஜீனோம்' புத்தகம் என் கண்ணில் பட்டது. நான்
சுஜாதா அவர்களின் தீவிர ரசிகன், அவர்
எழுதிய புத்தகங்களில் சொற்ப எண்ணிக்கையே என் கையில் உள்ளன.
சுஜாதா எழுதிய பல நாவல்கள் என்னிடம் இருக்கின்றன. அவர் எழுதிய
அறிவியல் சார்ந்த கட்டுரை புத்தகங்கள் 20-க்கும் மேற்பட்டவை இருக்கின்றனவாம். ஆனால் என்னிடம் இருக்கும் அறிவியல் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு இது ஒன்று
மட்டுமே. அறிவியலை, வாசிக்கும் வாசகனுக்கு எளிமையாக தமிழ்
வார்த்தைகளில் கொண்டு சேர்ப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
உதாரணம்:
இது ஒரு தொடர் பதிவாக வலம் வரும். அந்த புத்தகத்தில் அவர் என்ன கூறியுள்ளாரோ அதனை
அப்படியே மாறாமல் அளிக்க முயற்சிக்கிறேன் ( பச்சையா சொல்லனும்னா.. காப்பி
பண்ணி போடப் போறேன்..) அந்த
புத்தகத்தை நான் வாங்கியதற்கு காரணம் அதன் விலை வெறும் 22.ரூபாய் மட்டுமே. எனவே அதனை
புத்தகமாகவே படிக்க விரும்புபவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் புத்தகக்
கடையில் வாங்கி படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இல்லை.. இல்லை.. நான் லோகுவின் ஃப்ளாகில் தான் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கப் போகிறேன் என்று விரும்பினால் (உங்கள் விதியை யாரால் மாற்ற முடியும்… :P) இந்த தொடர்பதிவினை தொடர்ந்து படிக்கலாம். ஜீனோம் என்ற உயிர் ரகசியத்தைப் பற்றி இதில் சுஜாதா விலாவாரியாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தினை என் தங்கையிடம் அளித்தபோது "இது +2 உயிரியல் புத்தகத்திலேயே வந்துவிட்டது, ஆனால் அதில் இருப்பதை விட அதிகமாகவும் ஒவ்வொரு விஷயத்திற்கும் சுவாரசியமான எடுத்துக்காட்டு கூறி விளக்குவதாலும் படிக்க இனிமையாக இருக்கிறது" என்றாள். ஆகவே ஜீனோம் பற்றி நிரம்ப படித்தவர்கள் இந்த விஷயங்கள் காலம் பின்தங்கி இருப்பதாகக் கருதினால்அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது(ஏன்னா... சரக்கு 2001-ல் வெளிவந்தது...!). நம்ம +2 உயிரியல் புத்தகம் 2007-ல் தான் மாற்றப்பட்டது என நினைக்கிறேன். ஆனால் தலைவர் இதனை 2001-லேயே பிரித்து மேய்ந்து விட்டார். இந்த புத்தகத்தை இணையதளத்தில் பெற இங்கே க்ளிக் செய்யவும். இதோ இப்பதிவின் முடிவினை சுஜாதாவின் முன்னுரையுடன் முடிக்கிறேன்.
உதாரணம்:
மனிதன் என்பவன் கட்டடம்... அறைகள் அவன் செல்கள்...
அலமாரி ஒரு செல்லின் உட்கரு- அதாவது நியூக்ளியஸ்...
புத்தகம்தான் டி.என்.ஏ... அவ்வளவேதான்...
ஜீனோம் என்னும் இக்கட்டுரைத் தொடர் 'ஜூனியர் விகடன்' இதழில் வெளிவந்தது. அறிவியலை எளிமையாகத் தமிழில் எழுதும்
முயற்சியில் என் உற்சாகம் குறைவதே இல்லை.
ஆசிரியர் பாலசுப்ரமனியன்
அவர்களுக்கும் திருமகள் நிலையத்தாருக்கும் அட்டையை சிறப்பாக வரைந்த திரு.நாணா அவர்களுக்கும் நன்றி
- சுஜாதா
சுதந்திர தினம்
2001
ரெஸ்ட் எடுங்க...!!


No comments:
Post a Comment